இராணுவத்தினைரை மோதிய கடத்தல் வாகனம் - இருவர் வைத்தியசாலையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராணுவத்தினைரை மோதிய கடத்தல் வாகனம் - இருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோதனைசாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன் கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.

இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் வீதியில் வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

காயமைடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மரங்களை கடத்திச்சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்துசென்றுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.