நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரித்தது!


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று (04) மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பன்சியகம எனும் பகுதியில் 79 வயது பெண்ணொருவரும், மொரோந்தொட்ட எனும் பகுதியில் 61 வயது ஆணொருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் பலியாகினர். 


இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 93,000 ஐ கடந்துள்ளது. இன்று மாலை 6.00 மணி வரை 97 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 93,392 ஆக உயர்வடைந்துள்ளது.


இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 90,208 பேர் குணமடைந்துள்ளதோடு, 2,603 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post