ஒரு மதத்தை இலக்கு வைக்க நாம் விரும்பவில்லை, ஆகவே தான் முகத்தை மூடுவது தடை என்றோம் - பாதுகாப்பு செயலாளர்

ஒரு மதத்தை இலக்கு வைக்க நாம் விரும்பவில்லை, ஆகவே தான் முகத்தை மூடுவது தடை என்றோம் - பாதுகாப்பு செயலாளர்

ஏதாவது ஒரு இனத்தை, மதத்தை இலக்கு வைத்து புர்கா தடை தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுவாக நாம் அனைத்து வழிகளிலும் முகத்தை மூடுவதை நாம் தடை செய்துள்ளோம். அதற்கான சட்ட வரைபு இன்று தயாராகிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் அதனை புர்கா என அழைப்பதில்லை. ஒரு மதத்தை இலக்கு வைத்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையல்ல அது. புர்கா என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்ட ரீதியாக அதனைக் கையாள்வதற்கான சூழலை நாம் உருவாக்குவோம். நாம் யாரையும் அவமதிக்கும் வகையில் நாம் இதனைச் செயற்படுத்தவில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பை, தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.

மனித உரிமைகளின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்ஸர்லாந்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. ஆகவே ஏதாவது ஒரு இனத்தை மதத்தை இலக்கு வைத்து இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.