ஜும்ஆ மற்றும் தராவீஹ் தொழுகைக்கு தடை? நாட்டு முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

ஜும்ஆ மற்றும் தராவீஹ் தொழுகைக்கு தடை? நாட்டு முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை உள்ளிட்ட ஏனைய கூட்டுப் பிராத்தனை நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐவேளை தொழுகை நேரங்களில், பள்ளிவாசல்களில் அதிகபட்சம் 25 பேர் மாத்திரமே இருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொழுகைக்காக வருகை தரும் சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட விரிப்புகளை கொண்டுவருமாறும், வீடுகளிலேயே வுழூ செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினாலும், வக்ப் சபையினாலும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள், கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயங்களை பின்பற்றுவதற்கு, நடைமுறை சிக்கல்கள் காணப்படுமாயின், பள்ளிவாசல்களை மூடுவதற்கு உரிய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.