பொலிஸ் உத்தியோகத்தர்களை யாரும் தாக்க முடியாது! நான் வெளியிட்ட கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது! -அஜித் ரோஹண

பொலிஸ் உத்தியோகத்தர்களை யாரும் தாக்க முடியாது! நான் வெளியிட்ட கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது! -அஜித் ரோஹண


சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை யாராலும் தாக்கவோ அல்லது அவர்களது கடமைகளைத் தடுக்கவோ முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட கருத்துத் தவறாகப் புரிந்துகொண்டு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறினார்.

கொழும்பில் கனரக வாகன சாரதி ஒருவரை வீதியில் வைத்து போக்குவரத்து பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சைகள் எழுந்திருந்தன.

அந்நிலையில் “பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பொதுமகன் மீது தாக்குதல் நடாத்தினால், தற்காப்புக்காக பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முடியும்” எனும் தொனிப்பட பொலிஸ் ஊடக பேச்சாளர் கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் கருத்து பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.