புதையல் தோண்டிய பிக்குமார்! 11 பேர் கைது!

புதையல் தோண்டிய பிக்குமார்! 11 பேர் கைது!

புதையல் தோண்டிய பிக்குமார்! 11 பேர் கைது!

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிஸார் இன்று (04) கைது செய்துள்ளனர்.

தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்து பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த இரு பிக்குமார் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்,

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.