கிரீடத்தை பறித்த சூலா அதிரடி அறிவிப்பு! போட்டியை மீள நடத்தும்படி கோரிக்கை!

கிரீடத்தை பறித்த சூலா அதிரடி அறிவிப்பு! போட்டியை மீள நடத்தும்படி கோரிக்கை!


இலங்கையில் அண்மையில் நடந்துமுடிந்து சர்ச்சையை ஏற்படுத்திய திருமதி அழகுராணிப் போட்டியை மீள நடத்தும்படி சூலா பத்மேந்திரா தெரிவித்துள்ளார்.


புஷ்பிக்கா டி சில்வாவிடம் இருந்து கிரீடத்தை பறித்த குற்றச்சாட்டில் சூலாவும், முன்னாள் திருமதி அழகுராணி கரொலினா ஜுலியும் சிக்கியுள்ளனர்.


இவர்கள் சார்ந்த வழக்கு விசாரணையும் வருகின்ற 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் இயங்கும் ஊடகமொன்றுக்கு சூலா பத்மேந்திரா நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.


நேர்காணலில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.


5,000 டிக்கட் விற்பனை செய்து பிரவேசித்தவர்களுக்கு குறைந்த பட்சம் தண்ணீர் போத்தல்கூட கொடுக்கப்படவில்லை. இறுதியாக நான் எனது அம்மாவிடம் இருந்தே பணம் பெற்று குடிதண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கினேன். அப்படியிருக்கையில் எவ்வாறு நான் மதுபானம் அருந்தியிருப்பேன்? மதுபானம் அருந்தவில்லை. அந்தக் குற்றச்சாட்டையும் நிராகரிக்கின்றேன். 


நடந்துமுடிந்த இந்த அழகுராணிப் போட்டியில் பண மோசடி கூட இடம்பெற்றிருக்கலாம். இதுவரை கணக்கீடும் செய்யப்படவில்லை. சிங்கள மொழியில் இரு அழகுராணிப் போட்டியில் ஈடுபட்டவர்கள் பேசிய போதிலும் நடுவர்களாக இருந்த வெளிநாட்டு நடுவர்களுக்கு அதனை புரிந்துகொள்ள முடியாமற் போனது. காரணம், உரை மொழி பெயர்ப்பு இருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் புஷ்பிகா விவாகரத்து விடயமானது இறுதி சந்தர்ப்பத்தில்தான் தங்களுக்குத் தெரியவந்ததாகவும், அதன் காரணமாக தவறினை சரிசெய்யவே மகுடத்தைத் திரும்பப் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.