ஹரின் கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபரின் அறிவிப்பு!
advertise here on top
advertise here on top

ஹரின் கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபரின் அறிவிப்பு!


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் இன்று (30) உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.


தன்னைக் கைது செய்வதை தடுத்து உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான இதனை அறிவித்தார்.


சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஊடாக குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ள ஹரீன் பெர்ணான்டோ, மனுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளார்.


தான் வெளிப்படுத்திய சில விடயங்களை மையப்படுத்தி, பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் தன்னை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாகவும், இதனால் அரசியலமைப்பு ஊடாக வழங்கப்பட்டுள்ள தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.