குடும்பத் தகராறு கத்திக் குத்தில் முடிந்தது! இருவர் காயம்!

குடும்பத் தகராறு கத்திக் குத்தில் முடிந்தது! இருவர் காயம்!


வவுனியா – வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (16) மாலை உறவினர்கள் இடையே இடம்பெற்ற கத்திக்குத்து சம்பத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.


கிளிநொச்சியில் இருந்து பஸ்ஸில் வந்து மரம் ஒன்றுடன் மறைந்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் மனைவியின் சகோதரனான மைத்துணருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் இடுப்பு, முதுகில் குத்தியுள்ளார். இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


திருநகர் பகுதியைச் சேர்ந்த கத்திக்குத்து மேற்கொண்ட இளைஞனை அப்பகுதியில் இருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது35), அசோகன் வசந்தி (வயது 52) ஆகியோரே காயமடைந்தனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.