சாய்ந்தமருது பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!

சாய்ந்தமருது பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் முன்பாக இனந்தெரியாத ஒருவரின் சடலம் ஒன்று நேற்றிரவு (13) கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.


சுமார் 65 முதல் 70 வரை வயது மதிக்கத்தக்க இச்சடலம் கொலை செய்யப்பட்டதா அல்லது இயற்கை மரணமா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


குறித்த தனியார் கடைதொகுதியானது தனியார் வங்கியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன் மரணமடைந்தவர் காவலாளியாக நியமிக்கப்பட்டவர் எனவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதற்கமைய குறித்த சடலம் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிய குறித்த வங்கி நிருவாகத்தின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.


-பாறுக் ஷிஹான்
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.