குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!


சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.


குறித்த பிரிவின் பணிப்பாளராக இருந்த நிஷாந்த சொய்ஸா கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அந்த வெற்றிடத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.