எவரும் தப்பிக்க முடியாது! ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

எவரும் தப்பிக்க முடியாது! ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மேலும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.


ஏசுபிரான் உயிர்தெழுந்த நாளை கிரிஸ்தவர்கள் ஈஸ்டர் ஞாயிறு சிறப்பு நாளாக அனுஸ்ட்டித்து வருகின்றனர்.


இந்நிலையில், நாளை உலகளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஸ்ட்டிக்கப்படும் நிலையில், உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகிட்ட பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, கடந்த 2019 ஆண்டு இதேபோன்ற ஈஸ்டர் ஞாயிறு தினத்திலேயே, நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் சிலவற்றில் பயங்கரவாத குழுக்களினால் தற்கொலை தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டது.


இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதியுடன், குறித்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.