நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் இல்லை என நான் கூறவில்லை! பெல்டி அடிக்கும் மெல்கம் ரஞ்சித்?

நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் இல்லை என நான் கூறவில்லை! பெல்டி அடிக்கும் மெல்கம் ரஞ்சித்?


நேற்றைய தினம் தாம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பிழையான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை  குறிப்பிட்டார்.


கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே கர்தினால் ஆண்டகை இதனை குறிப்பிட்டார்.


நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் ஒன்று இல்லை என நான் கூறவில்லை. நான் எந்தவொரு அரசியல் சக்தியை பற்றியும் கூறவில்லை. சர்வதேச வஹாப் வாதத்தினை பற்றியே நான் கூறினேன். 


இன்று பலம்பொருந்திய நாடுகள் வஹாப் வாதத்தின் கைப்பொம்மைகளாக மாறியிருக்கலாம் என நான் நினைக்கிறேன். சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்கக்கூடிய அரசியல் சக்திகளையே நான் குறிப்பிட்டேன். இந்த நாட்டில் உள்ள அரசியல் சக்திகளையோ அல்லது அரசியல் கட்சிகளையோ நான் குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டார்.


மேலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே கர்தினால் ஆண்டகை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். -மடவள நியூஸ்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.