தனக்கு பரிசாக கிடைத்த வாகனத்தை தனது பயிற்சிவிப்பாளருக்கு வழங்கிய இந்திய கிரிக்கட் வீரர்!

தனக்கு பரிசாக கிடைத்த வாகனத்தை தனது பயிற்சிவிப்பாளருக்கு வழங்கிய இந்திய கிரிக்கட் வீரர்!

மஹிந்திரா நிறுவனம் வழங்கிய காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து பலரின் பாராடுக்களை பெற்றுள்ளார் இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி அறிவித்திருந்தார்.

அதன்படி சில தினங்களுக்கு முன்பு எல்லோருக்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய தார் காரை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயபிரகாஷுக்கு நடராஜன் பரிசளித்துள்ளார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post