பேராயர் மெல்கம் ரஞ்சித் கருத்தை மாற்றியது தொலைபேசி அழைப்பினை தொடர்ந்தா?

பேராயர் மெல்கம் ரஞ்சித் கருத்தை மாற்றியது தொலைபேசி அழைப்பினை தொடர்ந்தா?

பேராயர் மல்கம் ரஞ்சித் கூறிய அறிக்கை மறுநாள் மாற்றப்பட்டுள்ளது என்றும் இது கத்தோலிக்க மக்களுக்கும் இந்த நாட்டில் உள்ள பிற மக்களுக்கும் அவமரியாதை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலானது குறித்த குழுவின் பலத்தை தக்க வைத்துக்கொள்ளவே இடம்பெற்றதாக தெரிவித்த பேராயார், மறுநாள் தனது அறிக்கையை மாற்றி உலக பயங்கரவாதம் குறித்து தனி அறிக்கைகளை வெளியிட்டதாக அவர் கூறினார்.

கார்டினல் அவர்களுக்கு விஜேதாச ராஜபக்ஷ போன்ற தொலைபேசி அழைப்பு வரவில்லை என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவுடன் சந்தித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு இக்கருத்துக்களை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post