சீன பிரஜைகளுக்காக வேண்டி கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை!

சீன பிரஜைகளுக்காக வேண்டி கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை!


இலங்கையில் 3,000 முதல் 4,000 வரையிலான சீன பிரஜைகள் மாத்திரமே வசிக்கின்றனர் என இலங்கைக்கான சீன தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


சீனா வழங்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியில் ஒரு வீதத்தினை இலங்கை அதிகாரிகள் அவர்களிற்கு வழங்ககூடும் எனவும் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.


300,000 பேருக்கு போதுமான 600,000 தடுப்பூசியை சீனா வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சீனா தனது பிரஜைகளிற்காகவே தடுப்பூசியை வழங்கியது என சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post