ஆறு இலட்சம் ரூபா வரை நீர் கட்டணம் செலுத்தாத இராஜாங்க அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆறு இலட்சம் ரூபா வரை நீர் கட்டணம் செலுத்தாத இராஜாங்க அமைச்சர்!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வீட்டுக்கான நீர் கட்டணம் பெருந்தொகை நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதிக்கான நீர் பட்டியலுக்கான கட்டணம் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் நிலுவையாக உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் மத்திய மாகாண நிவாரண சேவை நிலையத்தினை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, கொரோனா தொற்று காலப்பகுதியில் இருந்து இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் வரை 341 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் மக்கள் செலுத்தவில்லை. இதனால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நீர் பட்டியலை விரைவான செலுத்துமாறு உரிய பிரிவுகள் மற்றும் நபர்களிடம் அறிவித்த போதும் அதனை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். (தமிழ்வின்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.