தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் பரவும் சாத்தியமுள்ளதாக மீண்டும் உறுதி!

தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் பரவும் சாத்தியமுள்ளதாக மீண்டும் உறுதி!


இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய  இரசாயனம் உள்ளடக்கப்பட்டுள்ளமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்துறை தொழினுட்ப நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய  இரசாயனம் உள்ளடக்கப்பட்டுள்ளமை கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து  மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய Aflatoxin உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post