மீண்டும் இந்தியாவை தாக்கிய கொரோனா - பாதிப்பில் முதலிடத்தில் இந்தியா!

மீண்டும் இந்தியாவை தாக்கிய கொரோனா - பாதிப்பில் முதலிடத்தில் இந்தியா!

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன் (ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள்) 477 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருவதுடன் கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது.

இந்நிலையில் பல நாடுகளில் நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், தங்களது எல்லைகளை மூடியும் உள்ளதுடன் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.

இந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.65 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,865,509 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 131,896,980 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106,183,010 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,847 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.