கனேடிய நாடாளுமன்ற ஸும் மீட்டிங்கில் நிர்வாணமாக தோன்றிய எம்.பி!

கனேடிய நாடாளுமன்ற ஸும் மீட்டிங்கில் நிர்வாணமாக தோன்றிய எம்.பி!


கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஸூம் செயலி மூலமான இணையவழி மாநாட்டின்போது நிர்வாணமாக தோன்றியமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.


வில்லியம் அமோஸ் (William Amos) எனும் இவர், கனடாவின் கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.


கடந்த புதன்கிழமை, இவர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஸூம் மீட்டிங்கில் பங்குபற்றவந்தார்.


இதற்காக அவர் தனது வீட்டிலுள்ள மடிக்கணினி இயங்கச் செய்தபோது, நிர்வாணமாக தென்பட்டார் எம்.பி வில்லியம் அமோஸ். அவரின் அந்தரங்கப் பகுதி, கையிலிருந்த செல்போன் மூலம் மறைக்கப்பட்டிருந்தது. அவரின் பின்னால் கனடா மற்றும் கியூபெக் மாகாண கொடிகள் காணப்பட்டன.


பின்னர் தனது நடவடிக்கைக்காக வில்லியம் அமோஸ் எம்.பி மன்னிப்பு கோரினார். 


"உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், நான் எனது வேலைக்கான ஆடைகளை மாற்றும்போது. துரதிஷ்டவசமாக எனது கெமரா இயங்கிக் கொண்டிருந்தது. நான் உண்மையாக மன்னிப்பு கோருகிறேன். இது ஒரு தவறு. இது போன்று மீண்டும் நடக்காது" என அவர் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விதிமுறைகளை வில்லியம் அமோஸ் எம்.பி. மீறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆண்கள், நாடாளுமன்ற விவாதத்தின்போது, ஷேர்ட், ஜக்கெட், கழுத்துப்பட்டி போன்றவற்றை அணிந்திருக்க வேண்டும் என விதிமுறை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எம்.பி. வில்லியம் அமோஸின் செயற்பாடு குறித்து, அவரின் லிபரல் கட்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அண்மையில் தென் ஆபிரிக்க நாடாளுமன்ற உறுப்பினரகளுக்கான ஸூம் மீட்டிங்கின்போது எம்.பி ஒருவரின் பின்னால் அவரின் மனைவி நிர்வாணமாக தோன்றியமை பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.