மைத்திரி அவர்களே! நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்கள்! -மெல்கம் ரஞ்சித்

மைத்திரி அவர்களே! நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்கள்! -மெல்கம் ரஞ்சித்


பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்படி தொடர்ந்தும் கட்சித் தலைவராக செயற்பட முடியும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.


அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்கள்! என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பினார்.


இன்று (04) ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.


மேலும், ஈஸ்டர் பயங்ரவாதம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துங்கள்.


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூறுகிறோம்.


ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவே குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.


இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் இதற்கான நீதி கிடைக்காவிட்டால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


-தமிழன்.lk


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.