புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பான அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பான அறிவிப்பு!


தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


இதன்படி, புத்தாண்டு களியாட்டங்களை முன்னெடுப்பது குறித்து விசேட வழிமுறைகள் அறிவிக்க்பட்டுள்ளன.


குறிப்பாக, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் என்பன கட்டாயமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், சமூக இடைவெளியை பின்பற்றி நடாத்த கூடிய விளையாட்டுக்கள் தவிர்ந்த ஏனைய விளையாட்டுக்களை நடாத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பாரிய அளவில் மக்களை ஒன்று திரட்டி களியாட்டங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.


இதேவேளை, கூடிய வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post