மர்மமான முறையில் தாய் மற்றும் 6 வயது மகன் பலி! கொலையா? தற்கொலையா?

மர்மமான முறையில் தாய் மற்றும் 6 வயது மகன் பலி! கொலையா? தற்கொலையா?

பொலன்னறுவை - பிஹிடிவெவ - நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post