53 பேருடன் இந்தோனேஷிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மாயம்!

53 பேருடன் இந்தோனேஷிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மாயம்!


இந்தோனேசியா நாட்டுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.


இன்று (21) அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (96 கி.மீ) தொலைவில் 53 பேருடன் பயிற்சியில் ஈடுபட்ட நீர் மூழ்கிக்கப்பல் தொடர்புகள் அற்ற நிலையில் காணாமல் போயுள்ளது. 


காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு நாடுகளிடம் கோரிக்கைகள் விடுத்துள்ளன.


எனினும் இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


ஆழமான நீரில் மூழ்குவதற்கு நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொடர்பு இழந்துள்ளதாக உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.