சதொச நிவாரணப் பொதி அறிமுகம் - ரூ. 410 வரை சேமிப்பு

சதொச நிவாரணப் பொதி அறிமுகம் - ரூ. 410 வரை சேமிப்பு

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட நிவாரணப் பொதிகளை இன்று முதல் ரூ. 1000 இற்கு வழங்குகின்றது

நாடு முழுவதும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு நிவாரணப் பொதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிவாரணப் பொதிகளினூடாக ரூ 410 சேமைப்பு பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிவாரணப் பொதிகளில் 3 கிலோ அரிசி, சீனி, பயறு, மாவு, உப்பு, நெத்தோலி, சோயா மீட், மிளகாய் துண்டுகள், தேயிலை, மற்றும் முகக்கவசம் ஆகியவை இருக்கும்.

 1. வெள்ளை சீனி 1 கிலோ - ரூ. 99 ( முந்தைய விலை ரூ. 120)
 2. வெள்ளை நாட்டு அரிசி 1 கிலோ -ரூ. 96 ( முந்தைய விலை ரூ. 110)
 3. வெள்ளைப் பச்சை அரிசி 1 கிலோ - ரூ. 93 ( முந்தைய விலை ரூ. 105)
 4. சிவப்பு பச்சை அரிசி 1 கிலோ - ரூ. 89 ( முந்தை விலை ரூ. 105)
 5. சிவப்பு பருப்பு 1 கிலோ - ரூ. 165 ( முந்தைய விலை ரூ. 187)
 6. கோதுமை மா 1 கிலோ - ரூ. 84 ( முந்தைய விலை ரூ. 105)
 7. கல் உப்பு 1 கிலோ - ரூ. 43 ( முந்தைய விலை ரூ. 82)
 8. நெத்தோலி 209 கிராம் - ரூ. 115 ( முந்தைய விலை ரூ. 286)
 9. LSL மிளகாய் துண்டுகள் 100 கிராம் - ரூ. 83 ( முந்தைய விலை ரூ. 120)
 10. சோயா மீட் 50 கிராம் - ரூ. 35 ( முந்தைய விலை ரூ. 35)
 11. STC தேயிலை 100 கிராம் - ரூ. 95 ( முந்தைய விலை ரூ. 135)
 12. முகக்கவசம் 1 - ரூ. 14 ( முந்தைய விலை ரூ. 20)
யாழ் நியூஸ்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.