பொலிஸ் நிலையம் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் வழங்கிய 23 வயது யுவதி கைது!

பொலிஸ் நிலையம் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் வழங்கிய 23 வயது யுவதி கைது!


தன்கொடுவ பொலிஸ் நிலையத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்று திட்டமிடப்பட்டதாக தெரிவித்து, போலியான தகவலை வழங்கியன் பிற்பாடு  23 வயது யுவதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த தாக்குதல் குறித்து குறித்த யுவதி பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119 வழியாக தொடர்புகொண்டு பொலிஸாரை எச்சரித்ததாக கூறப்படுகிறது.


தன்கொடுவ - மொஹட்டுமுல்ல எனும் பகுதியில் வசிக்கும் அந்தப் பெண்ணை நேற்று இரவு (18) பொலிஸார் கைது செய்தனர்.


பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு, நேற்றிரவு கொழும்பில் இருந்து ஒரு குழுவொன்று தன்கொடுவ பொலிஸ் நிலையத்தின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தவுள்ளதாகக் கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.


பின்னர், பொலிஸ் அவசர பிரிவு ஆரம்பித்த விசாரணையில் வென்னபுவ பொலிஸ் அதிகாரிகள் மூலம் சந்தேகத்திற்குறிய அந்த பெண்ணை கைது செய்தனர்.


பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் ஒருவரின் பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பது மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், குறித்த போலித் தகவலை வழங்கிய நபரே அந்த தொலைபேசியை உபயோகித்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.


எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட யுவதி நாவலப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்திற்கு வந்ததாகவும், யார் அந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார் என்பது அவருக்குத் தெரியாது எனவும் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து தன்கொடுவ மற்றும் வென்னபுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-எம்.எம் அஹமட்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.