நேற்றய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மாவட்ட ரீதியிலான அறிக்கை -கொழும்பு 228, கண்டி 86

நேற்றய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மாவட்ட ரீதியிலான அறிக்கை -கொழும்பு 228, கண்டி 86

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணாப்பட்ட 1,466 பேரில் 200 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 104,953 ஆகவும் அதிகரித்துள்ளது .

நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 228 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 94 பேர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் . குறிப்பாக 19 பேர் நாரேன்பிட்டிய, 18 பேர் பொரளை மற்றும் 17 பேர் தெமட்டகொடை பிரதேசங்களை சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் கொழும்பு மாவட்டத்தைத் தொடர்ந்து அதிகூடிய நோயாளர்களாக கம்பஹா மாவட்டத்தில் 209 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் திவுலுப்பிட்டிய மற்றும் 16 பேர் பியகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 172 பேர், களுத்துறை மாவட்டத்தில் 133 பேர், மாத்தளை மாவட்டத்தில் 119 பேர், கண்டி மாவட்டத்தில் 86 பேர், மொனராகலை மாவட்டத்தில் 58 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 54 பேர் ,கேகாலை மாவட்டத்தில் 49 பேர், திருகோணமலை மற்றும் பதுளை மாவட்டத்தில் தலா 47 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 44 பேர், காலி மாவட்டத்தில் 38 பேர், புத்தளம் மாவட்டத்தில் 34 பேர் ,அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 28 பேர் , அநுராதபுர மாவட்டத்தில் 24 பேர் தொற்றளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் 19 பேர், மாத்தறையில் 16 பேர், மட்டக்களப்பில் 15 பேர் , பொலன்னறுவையில் 14 பேர், யாழ்ப்பாணத்தில் 10 பேர், வவுனியாவில் 4 பேர், கிளிநொச்சியில் 3 பேரும் நாடளாவிய ரீதியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 15 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.