மருத்துவமனையில் தீ விபத்து; 13 கொரோனா நோயாளிகள் பலி!

மருத்துவமனையில் தீ விபத்து; 13 கொரோனா நோயாளிகள் பலி!


மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று (23) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.


இதையடுத்து அங்குள்ள நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 


அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.


முன்னணி தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான, சர் கங்காராம் மருத்துவமனையில், 500இற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


குறித்த மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட அவசர அறிவிப்பில், மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த 25 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்திருப்பதாகவும், கையிருப்பில் உள்ள ஒட்சிசன் இன்னும் 2 மணி நேரத்திற்கு மட்டுமே பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post