VIDEO : பிரிவினைவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : பிரிவினைவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து!

அதிகார பரவலாக்கல் மூலம் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதத்தை கொண்டு வர பலம்மிக்க நாடுகள் முயற்சித்து வருகிறது.

அந்த நாடுகளின் பூகோள அரசியல் தேவையை நிறைவேற்றி நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க தான் எந்த வகையிலும் தயாரில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிட்டபெத்தர பிரதேசத்தில் நேற்று (27) நடைபெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவம் குறைந்தன் காரணமாகவும் சரியான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினாலும் இப்படியான சம்பவம் நடந்தது என ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அனைத்து பக்கங்களிலும் உள்ளன. அடிப்படையாக தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது.

அடுத்ததாக சர்வதேசத்திற்கு சென்று ஜெனிவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கி எமது நாட்டின் இறையாண்மை சுதந்திரத்தை முற்றாக இல்லாமல் செய்தனர்.

நாங்கள் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகினோம். இதனால், அவர்கள் எமக்கு எதிராக வேலை செய்கின்றனர். அது பரவாயில்லை. அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.

நாங்கள் சுதந்திரமான நாடு. எமது வேலைகளை எம்மால் செய்ய முடியும். நாங்கள் அச்சமின்றி அவற்றை எதிர்கொள்வோம்.

வேறு நாடுகளின் தாராளமயக் கொள்கை அதேபோல், இந்து சமுத்திரத்தின் பலமிக்க நாடுகளின் பிரச்சினைகளில் நாங்கள் தலையிடுவது அவசியமில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2021.03.27 “ගම සමග පිළිසඳර” 16 වැනි වැඩසටහන, මාතර දිස්ත්‍රික්කයේ, පිටබැද්දර, කිරිවැල්කැලේ උතුර ග්‍රාමයේදී පැවත්විණ. එම...

Posted by Department of Government Information - Sri Lanka on Saturday, March 27, 2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.