இலங்கையில் அறிமுகமாகவிருக்கும் வரம்பற்ற இணையம்(Unlimited Data) !

இலங்கையில் அறிமுகமாகவிருக்கும் வரம்பற்ற இணையம்(Unlimited Data) !

Unlimited Internet Packages களை வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் வரும் ஏப்ரல் முதல் இந்த பெக்கேகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன் உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் இது தொடர்பாக பின்வரும் குறிப்பை ஆணைக்குழு பதிந்துள்ளது. ,

இலங்கை தொலைதொடர் ஒழுங்படுத்தல் ஆணைக்குழு அனைத்து ஆபரேட்டர்களுக்கும் மார்ச் 1 ஆம் திகதிக்குள் வரம்பற்ற இணைய தொகுப்புகளுடன் பதிலளிக்க ஒரு உத்தரவைத் தொடங்கியது, மேலும் இதற்கு ஆபரேட்டர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தொகுப்புகளை மதிப்பிடும் பணியில் நாங்கள் தற்போது இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறோம். ஏப்ரல் 2021 க்குள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பற்ற திட்டங்களை நுகர்வோர் எதிர்பார்க்கலாம்.

அத்தோடு. தொலைபேசி இலக்கத்தை மாற்றாது சேவை வழங்குனரை மாற்றும் வசதியை பாக்கிஸ்தானின் தொழிநுட்ப உதவியுடன் வரும் ஒக்டோபர் முதல் வழங்குவதற்கான நடவடிக்ககைகள் வெற்றியளித்துள்ளதாக கடந்த வாரம் ஆணைக்குழு அறிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post