
முச்சக்கர வண்டியில் பாடசாலை செல்லும் வழியில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த சந்தேகத்தின் பேரில் ஓய்வு பெற்ற இராணுவ வீரரை அலுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொரகல்ல பகுதியில் இருந்து அழுத்கம நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்வதற்காக தனது 16 வயது சிறுமியை அயல்வீட்டில் வசிக்கும் 52 வயதான முச்சக்கர வண்டி ஓட்டுநரிடம் குறித்த மாணவியின் தாய் ஒப்படைத்துள்ளார்.
சந்தேக நபர் முச்சக்கர வண்டியை காலி வீதியூடாக அலுத்கம நோக்கி செலுத்திக்கொண்டு இருந்த போது, சிறிது தூரம் சென்றதும், மாணவிக்கு தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ ஒன்றினை பார்க்கும் படி கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில், குறித்த மாணவி அதை நிராகரித்தார், கூச்சலிட்டார். பின்னர் காலவிலவத்தை எனும் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியின் வேகம் குறைந்த சமயம் பார்த்து அதிலிருந்து வெளியே குதித்துள்ளார்.
மாணவியின் அலறலைத் தொடர்ந்து, அப்பகுதி குழுவினர் சம்பவ இடத்தில் கூடினர், மாணவி இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் விளங்கியதோடு,அலுத்கம பொலிஸ் நிலையத்துக்கு சென்று இது தொடர்பில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர், தப்பி ஓடிய முச்சக்கர வண்டியின் ஓட்டுநரை சில மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
$ads={1}
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் என்றும், வாடகை அடிப்படையில் முச்சக்கர வண்டியை ஓட்டி வந்ததாகவும், தனது பக்கத்து வீட்டுக்காரர் என்ற ஒரே காரணத்தால் நம்பிக்கையுடன் தனது மகளை முச்சக்கர வண்டியில் அனுப்பியதாகவும் இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மாணவியின் தாய் போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், சந்தேக நபருடன் ஆபாச காட்சிகளைக் காட்ட பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி மற்றும் மொபைல் போனை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மொபைல் போன் அரசு ஆய்வாளருக்கு அனுப்பப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
-எம்.எம் அஹமட்