நாங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்து செயற்பட்டால் எங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது! -SLPP நாலக கொடஹேவ

நாங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்து செயற்பட்டால் எங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது! -SLPP நாலக கொடஹேவ


அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு குறைவடைகின்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ அரசாங்கத்திற்குள் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை காணவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் வெல்ல முடியாத நிலையேற்படலாம் என தெரிவித்துள்ளார்.


நாங்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் எங்களுக்கு போதுமான மக்கள் ஆதரவு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்,மக்கள் மத்தியில் பிரச்சினைகள் காணப்படுகின்றன அதிருப்தியும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் இதனை உணராவிட்டால் நாங்கள் மேலும்வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்வரும் தேர்தல்களை இந்த அரசாங்கத்தினால் வெல்ல முடியுமா என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும், எங்கள் மத்தியில் ஐக்கியம் இல்லாவிட்டால் அடுத்த தேர்தல் சுலபமானதாகயிராது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்து  செயற்பட்டால் எங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் தரப்பில் உள்ளவர்கள் கூட இதனை மறந்துவிட்டார்கள் என்பது கவலையளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post