காணாமல் போயுள்ள 10 வயது சிறுமி; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

காணாமல் போயுள்ள 10 வயது சிறுமி; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


மீகொடை, வெலிசெனவத்தையை 10 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார் என அறிவித்துள்ள அதிகாரிகள், சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முடித விதானபத்திரன 26 ஆம் திகதி முதல் சிறுமி காணாமல்போயுள்ளார் என தெரிவித்துள்ளார்.


சிறுமியின் தாயார் விவகாரத்து பெற்று வெளிநாட்டிற்கு சென்று அங்கு மறுமணம் செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


தந்தை 2007 இல் உயிரிழந்த நிலையில் சிறுமி உறவினர்களுடன் வசித்து வந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், லண்டனில் இருந்து நாடு திரும்பிய தாயார் இலங்கைக்கு திரும்பி வந்து தனது பொறுப்பில் சிறுமியை எடுத்து அவரை லண்டனிற்கு அழைத்து செல்ல முயன்றார் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து நீதிமன்றம் சிறுமியின் கைவிரல் அடையாளங்களை உறுதி செய்வதற்காக அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு உறவினர்களிற்கு மூன்று முறை உத்தரவிட்டது என  தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஆனால் உறவினர்கள் சிறுமியை மறைத்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தாய் எம்மிடம் முறைப்பாடு செய்தார் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


நான் பொலிஸ்மா அதிபருக்கு இது குறித்து கடிதம் எழுதினேன், ஆனால் பொலிஸார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை இதனை தொடர்ந்து சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உதவியை நாடியுள்ளோம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


-தினக்குரல்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post