கொரோனா ஜனாஸா நல்லடக்கம்: ஏறாவூர் PSP நிறுவனத்தினால் 150,000 ரூபாய் நிதி கையளிப்பு!

கொரோனா ஜனாஸா நல்லடக்கம்: ஏறாவூர் PSP நிறுவனத்தினால் 150,000 ரூபாய் நிதி கையளிப்பு!


கொரோனோ தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்து கொண்டிருக்கும் ஓட்டமாவடி - சூடுபத்தினசேனை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட பல தேவைகள் அவசரமாக பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால், ஏறாவூர் சார்பாக பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் உலமா சபையும் இணைந்து அத்தேவைகளுக்கான பங்களிப்பை வழங்கும் பொருட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


குறித்த முன்னெடுப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஏறாவூரில் தன்னார்வ பணிகளில் முன் நின்று செயற்படும் ஏறாவூர் PSP அமைப்பினர் ரூபா 150,000 நிதியினை முன்வந்து வழங்கினர்.


$ads={1}


குறித்த நிதியினை இன்று (10) இரவு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில், சம்மேளன தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் ஆகியோரது பிரசன்னத்துடன் PSP அமைப்பின் பிரதிநிதிகள் கையளிப்பு செய்தனர்.


ஏறாவூர் சம்மேளனம் சார்பில் அவர்களுக்கு நன்றிகளும் பிரார்த்தனைகளும் உண்டாகட்டும்.


-முஹம்மட் அஸ்மி


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.