PHOTOS : “இயற்கையோடு இயைந்த கல்வி” கல்வி நிறுவனத்தின் 9 ஆவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : “இயற்கையோடு இயைந்த கல்வி” கல்வி நிறுவனத்தின் 9 ஆவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழா!

அறிவிருட்ஷத்தின் இணை அமைப்பான இயற்கையோடு இயைந்த கல்வி (Nature Based Education) கல்வி நிறுவனத்தின் ஒன்பதாவது நிறைவு தினத்தை முன்னிட்டு 20.03.2021 (சனிக்கிழமை) அன்று பல்வேறு நிகழ்வுகளும் விளையாட்டுப் போட்டிகளும், 1-11 தர மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் வெகு சிறப்பாக நடைப்பெற்றன.

அவ்வகையில் இச்சிறப்பு வைபவத்திற்கு திருமதி ZA. கமருநிஸா (பு/ ஸாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியர்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக திரு. IM. சுறைஸ் (பணிப்பாளர்- அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு), திருமதி. றிஸானா (ஆசிரியர்-பு/ ஸாஹிரா தேசியக் கல்லூரி) திருமதி. சித்தி ஜனூபா, திருமதி. சிபாயா ரஹீம் ( ஆசிரியர்- NBE), செல்வன் I. Asjad (பணிப்பாளர் - Moon fm மற்றும் செயலாளர்- அறிவிருட்ஷக் கழகம்) கலந்து சிறப்பித்தனர்.

பி.ப 3 மணி அளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இனிதே நடைப்பெற்று பி.ப 4.30 மணிக்கு நிறைவுபெற்றன. மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பி.ப 4.30 மணி அளவில் பிரதம அதிதி அவர்களின் வரவேற்புடன் NBE DAY வைபவம் சமய ஆராதனையோடு ஆரம்பிக்கப்பட்டது. திருமறையிலிருந்து சில வசனங்களை செல்வி MF. Maryam Ala அவர்கள் ஓதிச் சென்றார். தொடர்ந்து வரவேற்புரை அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் செல்வன் MTM. Siyan அவர்களால் நிகழ்த்தப்பட்டது.மேலும் நிகழ்வை மெருகூட்டுவதற்காக செல்வி MF. மர்யம் அலா மற்றும் செல்வி HR. லைலா அவர்களினால் நடனம் ஒன்று "NBE DAY" பற்றிய சிறப்புரையை செல்வன் I. Asjad (moon fm பணிப்பாளர் மற்றும் அறிவிருட்ஷ கழக செயலாளர்) அவர்கள் வழங்கிச் சென்றார்.

சிறப்புரை நிறைவு பெற எமது "NBE DAY" இன் பிரதான நிகழ்வான கேக் வெட்டும் நிகழ்வு இனிதாக இடம்பெற்றது. அவ்வகையில் திருமதி. ZA. Kamaruniza(ஆசிரியர்- பு/ ஸாஹிரா தேசிய கல்லூரி), திரு. IM. Surais(பணிப்பாளர் -அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு), திருமதி. AR. Rizana Raheem (ஆசிரியர்- பு /ஸாஹிரா தேசிய கல்லூரி) திருமதி. Siththi Janoofa, திருமதி. AR. Sifaya Raheem (ஆசிரியர் -NBE ),செல்வன் I. Asjad (பணிப்பாளர் - Moon fm மற்றும் செயலாளர்- அறிவிருட்ஷக் கழகம்), செல்வி. MSF. Simnas ( பணிப்பாளர்- NBE), செல்வி. MSF. Rafdha (செயலாளர்- NBE) ஆகிய அனைவரும் சூழ NBE DAY கேக் வெட்டும் நிகழ்வு சுவையான தருணமாக கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து பிரதம அதிதி உரை திருமதி. ZA. கமருநிசா (ஆசிரியர்- பு/ ஸாஹிரா தேசிய கல்லூரி) அவர்களால் வழங்கப்பட்டது. பிரதம உரை நிறைவு பெற, பிரதம அதிதி அவர்களுக்கு NBE கல்வி நிறுவனத்தினால் நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து "தற்கால நிலைமை" பற்றிய சிறப்புரையை செல்வி HR. ரிதாஜ் அவர்கள் நிகழ்த்திச் சென்றார். மற்றும் செல்வன். MNM. மிஸ்பாஹ் அவர்களினால் ஆத்திச்சூடி அழகாய் வழங்கப்பட்டது. மேலும் ஆங்கில சொற்பொழிவு ஒன்றை செல்வி. MTF. சிம்ரா அவர்கள் வழங்கினார். அதைத்தொடர்ந்து மழலை மொழி கதையொன்றை சுவைப்பட கூறிச்சென்றார் செல்வன். AM. அன்சப் அவர்கள். அதைத்தொடர்ந்து தரம் 10 தமிழ் மொழியும் இலக்கியமும் நூலில் உள்ள நீதிப்பாடல்களை மனனம் செய்து மொழிந்தார் தரம் ஐந்தைச் சேர்ந்த செல்வி. HR. லைலா அவர்கள். அந்நிகழ்வு நிறைவு பெற, NBE பணிப்பாளர் செல்வி. MSF. Simnas அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. மேலும் பிரதம அதிதியினால் அன்பளிப்பு ஒன்றையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 11 வரைக்குமான நடைபெற்ற விளையாட்டுப்போட்டிக்களுக்கான சான்றிதழ் வழங்குதலும் பரிசளிப்பு வைபவமும் சிறப்புற நடைபெற்றது.

மேலும் வருகை தந்த அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் எமது கல்வி நிறுவனத்திற்கு உடல் உள ஆலோசனை ஒழுங்கமைப்பு மற்றும் படத்தொகுப்பு உதவிகளை வழங்கிய அனைவருக்கும் இனிதான நன்றிகள். இந்நிகழ்வை சிறப்புற நடாத்தி வைத்து கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது இதய நன்றிகள். 

- அஸ்ஜத் இர்ஷாத்-


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.