இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க நடவடிக்கை! இராணுவத் தளபதி நம்பிக்கை!

இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க நடவடிக்கை! இராணுவத் தளபதி நம்பிக்கை!


வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான நாட்களை 07 ஆக குறைக்குமாறு இரா ணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டு இந்நாட்டிற்கு வரும் இலங் கையர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தைக் கேட்டுள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்தார்.


வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் 07 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து வெளியே அனுப்பப் படுபவர்கள் மேலும் 07 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


$ads={1}


அத்துடன் குறித்த இரண்டு கோரிக்கைகளும் எதிர்வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும் என நம்புவதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.


ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் போது வெளிநாட்டிலிருந்துவரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post