ஷரீஆ சட்டம் பின்பற்ற வேண்டும் என்றால் அசாத் சாலி உள்ளிட்ட அனைவரும் சவூதிக்கு செல்லுங்கள்! சரத் வீரசேகர அதிரடி!

ஷரீஆ சட்டம் பின்பற்ற வேண்டும் என்றால் அசாத் சாலி உள்ளிட்ட அனைவரும் சவூதிக்கு செல்லுங்கள்! சரத் வீரசேகர அதிரடி!


நாட்டில் சரீஆ சட்டம் குறித்து கதைப்பதாயின் இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.


இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.


நாட்டில் தேச வழமை மற்றும் கண்டியர் உள்ளிட்ட பல்வேறு தனியார் சட்டங்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில், தாம் முஸ்லிம் தனியார் சட்டத்தை பின்பற்றி வருவதாக அவர் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில், குறித்த கருத்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.


$ads={1}


“அவர் தெரிவித்த கருத்து, மத அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய கருத்தாகும். மத அடிப்படைவாதமே இறுதியில் தீவிரவாதம் வரை செல்கின்றது. ஷரீஆ சட்டத்தின்படி அவர் வாழ வேண்டும் எனில், சவூதி அரேபியாவுக்கே அவர் செல்ல வேண்டும். அவருக்கு இலங்கையில் இருக்க முடியாது. இலங்கையில் இருக்க வேண்டும் எனில், இலங்கை சட்டத்தின் படியே அவர் உள்ளிட்ட அனைவரும் செயற்பட வேண்டும். 


அனைவரும் இலங்கை சட்டத்தை மதிக்கும் போது, அவர் மாத்திரம் ஷரீஆ சட்டம் குறித்து கதைப்பது எனில், ஷரீஆ சட்டம் பின்பற்றப்படுகின்ற நாடொன்றுக்கே அவர் செல்ல வேண்டும். எமது நாட்டில் இருந்து கொண்டு சரீஆ சட்டம் குறித்து கதைக்க முடியாது. எவ்வாறாயினும் அவரைக் கைது செய்து, அவரின் கருத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.” என்றார்.


வீடியோ: https://fb.watch/4cxfVi9LuL/


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.