பாடசாலைகள் மீள் திறப்பது தொடர்பாக சற்றுமுன் வெளியான அறிவித்தல்!

பாடசாலைகள் மீள் திறப்பது தொடர்பாக சற்றுமுன் வெளியான அறிவித்தல்!


மேல் மாகாணத்தைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (08) காலை தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரைகளின்படி மேல் மாகாணம் தொடர்பான முடிவு இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று பிற்பகல் ஒரு முடிவை அறிவித்துள்ளார், அதன்படி மேல் மாகாண பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரங்களில் வெளி மாகாணங்களுடன் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்துள்ளார். 


$ads={1}


பரீட்சைகளுக்கு அவசியமான தரம் 5, சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகள் மாத்திரமே இம்மாதம் 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.