ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இதுவரை வாக்களிக்க இணக்கம் தெறிவித்த நாடுகளின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இதுவரை வாக்களிக்க இணக்கம் தெறிவித்த நாடுகளின் விபரம்!

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையின் இறுதி வடிவம் பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்ட நிலையில் 20 நாடுகள் வரையில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இணங்கியிருக்கின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசுக்கு ஆதரவாகத் திடமாக நிற்போம், பிரேரணையை எதிர்த்து வாக்களிப்போம் என 08 அல்லது 09 நாடுகள் மட்டுமே உறுதியளித்திருக்கின்றன என்றும் கூறப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 நாடுகளில் 20 நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிரான பிரேரணை மீது திரட்டியுள்ள பிரிட்டன், ஜேர்மனி, கனடா, மென்ரிநீக்காரோ, மஸிடோனியா ஆகிய அனுசரணை நாடுகள், குறைந்தது இன்னும் 04 நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றன என்றும் கூறப்பட்டது.

அங்கத்துவ நாடுகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவற்றின் (24 நாடுகள்) ஆதரவுடன் வாக்கெடுப்புக்குச் செல்வதே தங்களுக்குப் பலம் மற்றும் வலுவானது என இந்தப் பிரேரணையின் அனுசரணை நாடுகள் கருதுகின்றன.

பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இன்னும் எட்டு நாட்கள் இருப்பதால் அந்த நான்கு நாடுகளின் ஆதரவைக் கூட எட்டிவிடலாம் என அனுசரணை நாடுகள் தரப்பில் கூறப்படுகின்றது.

தமக்கு 10 நாடுகளின் ஆதரவு இருக்கின்றது என இலங்கை கூறினாலும் அது வாக்கெடுப்பு சமயத்தில் எட்டு அல்லது ஒன்பதாகக் குறைந்து விடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வாக்கெடுப்பில் பல நாடுகள் பங்கெடுக்காமல் நடுநிலைமை வகிக்கக்கூடும் என்பதால் இப்போது தமக்குக் கிடைத்துள்ள 20 நாடுகளின் ஆதரவுடனேயே பிரேரணையை தீர்மானமாக,வெற்றிகரமாக அனுசரணை நாடுகள் நிறைவேற்றிக் கொள்ளும் என்றும் கூறப்பட்டது.

$ads={1}

இதற்கிடையில் இந்தப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்து, தங்களுக்கு ஆதரவு நல்கும்படி அங்கத்துவ நாடுகளின் தலைவர்களை இலங்கை நேரடியாகத் தொடர்பு கொண்டு கோரி வருகின்றது.

அந்தவகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தொலைபேசி மூலம் ஆதரவு கோரினார்.

வேறும் சில நாட்டுத் தலைவர்களுடனும் அவர் பேசினார் என்று கூறப்பட்டது. ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்பு கொண்டு ஆதரவு கோரி வருகின்றார் எனவும் கூறப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.