கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மாயம்! தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை!
advertise here on top
advertise here on top

கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மாயம்! தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை!


கொழும்பில் காணாமல்போன பாடசாலை மாணவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு - பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலைகயில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரியவருகிறது.

நேற்றைய தினம் (18) காலை முதல் குறித்த இந்த மாணவனை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கறுப்பு நிற ஆடை, அணி பை ஒன்றுடன் இந்த மாணவன் காலை 6.20 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அல்டன் டெவோன் கென்னி என்ற 16 வயது மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மாணவரை காணவில்லை என கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாணவனின் நடமாட்டம் தொடர்பில் சிசிடிவி காணொளிகள் மூலமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0773779850 (தீபிகா - மாணவனின் தாய்) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.