பெண்ணொருவரின் சடலம் உற்பட அவரது உடமைகளும் மீட்பு!
advertise here on top
advertise here on top

பெண்ணொருவரின் சடலம் உற்பட அவரது உடமைகளும் மீட்பு!


கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலேயே இவ்வாறு பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.


குறித்த பெண் 30 வயது மதிக்கதக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.


சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.