மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தடை! தீவிர ஆராய்வில் பிரித்தானியா!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தடை! தீவிர ஆராய்வில் பிரித்தானியா!


இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரித்தானிய அமைச்சர் நைஜல் அடம்ஸ் உலக நாடுகளில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சில தடைகளை விதிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன நிகழ்ச்சி நிரலில் மிகவும் முக்கிய வாய்ந்த விடயங்களாக காணப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு பொறுப்பு கூறல் மிகவும் அவசியமானதொன்றாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு பொறுப்பு கூறல் மிகவும் அவசியமானதொன்றாகும்.

இதேவேளை உலக நாடுகளில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சில தடைகளை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

$ads={1}

இந்நிலையில் மேலும் பலருக்கு தடைகளை விதிப்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்.

இதேவேளை இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்காக பிரித்தானியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரின் முன்மொழிவுகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம், என மேலும் பிரித்தானிய அமைச்சர் நைஜல் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.