வாகன உரிமையாளர்களே அவதானம் - பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு!

வாகன உரிமையாளர்களே அவதானம் - பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு!

தேய்ந்த டயர்கள் மற்றும் பிற குறைபாடுகளைக் கொண்ட வாகனங்களைக் கண்டறிய இன்று (22) முதல் சிறப்பு மூன்று நாள் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மோட்டார் விபத்துக்களைத் தடுக்க பொலிசாரினால் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் (டி.ஐ.ஜி) அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று அதிகாலை 06 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் 8 பேர் இறந்துள்ளதாகவும், தினசரி விபத்துக்கள் காரணமாக 9-10 உயிர்கள் இழப்பதாகவுக் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் வீதி விபத்துகளுக்கு வாகனங்களில் ஏற்படும் குறைபாடுகள் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

எனவே, தேய்ந்துபோன டயர்களைக் கொண்ட வாகனங்களைக் கண்டறிய ஒரு நடவடிக்கையைத் தொடங்க பொலிஸ் தலைமையகம் சிறப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் ஏற்படும் தவறுகளுக்கு ஒத்துழைக்கவும், வீதி விபத்துகளைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டயர்கள் தேய்ந்துள்ளமையானது போக்குவரத்து குற்றம் எனவும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான தேய்ந்த டயர்களுடம் வாகனம் விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்தால், குற்றவாளிக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post