
கைதான சந்தேக நபர்கள் ஆனமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் அழிவு, காடழிப்பு மற்றும் புதையல் வேட்டை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை காவல்துறை புதிய விசாரணைப் பிரிவை நிறுவி வருவதாகவும், இது தொடர்பான அவசர அழைப்பினை மேற்கொள்ள நான்கு இலக்கம் கொண்ட தொலைபேசி இலக்கங்களும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.