இலங்கை தேசிய கொடியை கால் துடைப்பமாக விற்கும் அமேசன் நிறுவனம் - வெடித்தது சர்ச்சை!

இலங்கை தேசிய கொடியை கால் துடைப்பமாக விற்கும் அமேசன் நிறுவனம் - வெடித்தது சர்ச்சை!

உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசன் நிறுவனமானது இலங்கை தேசிய கொடியினை கால் துடைப்பம் வடிவில் வடிவமைத்து தனது இணையத்தளத்தில் விற்பனை செய்து வருகின்றது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட அமேசன் நிறுவனத்தின் அமேசன்.காம் எனும் வலைத்தளம் இதன் விலையினை 12 அமெரிக்க டாலராக விற்பனை உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றத்ய்.

இணையம் வழியாக உலகளவில் பொருட்களை விற்கும் நிறுவனம், சிங்கப்பூரிலிருந்து உலகளவில் இதனை விநியோகிக்கிறது மற்றும் இலங்கைக்கு அனுப்ப 9.20 அமெரிக்க டாலர் கட்டணம் அறவிடப்படுகின்றது.

அமேசன் நிறுவனத்தின் ஆண்டொன்றிற்கான வருமானம் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த கால் துடைப்பம் இலங்கை சந்தைக்கு விற்பனை செய்தால், தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து தேவையான அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திசானநாயக்க தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post