அம்பாறை இனவெறித்தாக்குதலுக்கு காரணமானது பாதுகாப்பு அமைச்சரே! என்னிடம் குரல் பதிவு உள்ளது! - அசாத் சாலி

அம்பாறை இனவெறித்தாக்குதலுக்கு காரணமானது பாதுகாப்பு அமைச்சரே! என்னிடம் குரல் பதிவு உள்ளது! - அசாத் சாலி

azath salley

ஷரீஆ சட்டத்தை பின்பற்ற வேண்டுமாக இருந்தால் சவூதி அரேபியாவுக்கு செல்லவேண்டிய தேவையில்லை. நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே அனைத்து இன மக்களுக்குமான தனியார் சட்டங்கள் நாட்டில் அமுலில் உள்ளன. அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் அரசாங்கம் எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி திசை திருப்பும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.


இலங்கை மக்கள் நாட்டு சட்டத்தையே பின்பற்ற வேண்டும். அசாத் சாலி ஷரீஆ சட்டத்தை பின்பற்றுவதாக இருந்தால் சவூதி அரேபியாவுக்கு செல்லவேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 


எமது நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் அவர்களுக்குரிய தனியார் சட்டங்கள் ஒல்லாந்தர் காலம் முதல் இருந்து வருகின்றன. சிங்கள மக்களுக்கு கண்டிய சட்டம், இந்துக்களுக்கு தேசவழமை சட்டம் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டம் என நாடு சுதந்திரம் பெற்று 73 வருடகாலமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த சட்டங்களை பின்பற்றி வருகின்றோம். அதனால் ஷரீஆ சட்டத்தை பின்பற்றுவதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டியதில்லை.


$ads={1}


அத்துடன் நாட்டு சட்டத்தை மதிக்கப்போவதில்லை என நான் தெரிவித்ததாக தெரிவித்து என்னை கைது செய்வதாக அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார். என்னை கைது செய்வது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. கைது செய்தாலும் நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்த வேண்டும். அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினையை சரத் வீரசேகரதான் திட்டமிட்டு மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த குரல் பதிவு என்னிடம் இருக்கின்றது. இனங்களுக்கடையில் பிரச்சினையை ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிரான ஆதாரங்களையும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்போம் என்றார்.


-எம்.ஆர்.எம்.வசீம்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.