
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமந்த ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பண்டிகை காலங்களில் மக்களின் அதிக நடமாட்டத்தால் நாட்டில் கொரோனா பரவும் ஆபத்து மீண்டும் அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா ஆபத்து காரணமாக இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள் விரைவில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு மீண்டும் தொடங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.