பொலிஸாரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது!

பொலிஸாரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது!

பொலிஸ் அதிகாரியை போன்று ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மேல் மாகாண தென் குற்றப்பிரிவு அதிகாரிகளினால் நேற்று (15) பன்னிபிட்டியவில் வைத்தி கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என தெரிவித்து போலி அடையாள அட்டையொன்றையும் பயன்படுத்தி பல்வேறு குற்றங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரின் சீருடை அணிந்த பல படங்களையும் அந்த நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

ரக்வான பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் இன்று மகரகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மீது தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.