கணவரை கொன்ற மூன்று குழந்தைகளின் தாய் கைது!

கணவரை கொன்ற மூன்று குழந்தைகளின் தாய் கைது!

கொஸ்வத்த பிரதேசத்தில் தனது வீட்டில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 38 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் எனவும் கொஸ்வத்த லுனுவில பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிப்பட்ட தகராறு தொடர்பாக அவர் தனது கணவரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பலியான நபர் 44 வயதுடையவர் என்றும், மூன்று குழந்தைகளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post