பசறை விபத்தை நேரில் பார்த்த இம்ரான் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

பசறை விபத்தை நேரில் பார்த்த இம்ரான் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!


பசறை 13ஆம் மைல் கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், விபத்திலிருந்து நொடி பொழுதில் தப்பிய ஒருவர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிபில பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவரே இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான், இந்த பேருந்திலேயே நாளாந்தம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எனினும், பஸ் விபத்துக்குள்ளான கடந்த 20ம் திகதி, நொடி பொழுதில் அந்த பஸ்ஸில் ஏறுவதற்கு இம்ரான் கானுக்கு முடியாது போயுள்ளது. இம்ரான் கான் வழமையாக ஏறும் இடத்திற்கு பேருந்து, சுமார் 7:15 அளவில் வந்துள்ளது.

பேருந்தை நிறுத்துமாறு கைகளை காண்பித்து கோரிய போதிலும், சாரதி, பேருந்தை நிறுத்தாது பயணித்துள்ளதாக இம்ரான் கான் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில், பேருந்தின் சாரதி தொலைபேசியில் உரையாடிக்கொண்டு பயணித்ததை தான் அவதானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிறுத்தாது பயணித்து, சில நொடிகளில் தன் கண் முன்பாகவே பள்ளத்தில் குடைசாய்ந்து, விபத்துக்குள்ளாகியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.